பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

371


பாட்டு ஆராய்ச்சி, சாகுந்தல நாடக ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி என்பன சிறந்தனவாம். மகாவித்துவான் ரா. ராகவையங்கார் பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி பட்டினப்பாலை ஆராய்ச்சி, தித்தன் கோசர் என்பாரைப் பற்றிய சிற்றாராய்ச்சி நூல்களை இயற்றியுள்ளார். திரு. கே. கோதண்டபாணிப் பிள்ளை அவர்கள், 'நெடுநல் வாடை ஆராய்ச்சி' எழுதியுள்ளார். டாக்டர் இராசமாணிக்கனார் அவர்கள், 'பெரியபுராண ஆராய்ச்சியும்; திரு. வெ. சு. சுப்பிரமணியாச்சாரியார் அவர்கள் 'சிலப்பதிகார ஆராய்ச்சி'யும் செய்துள்ளனர். டாக்டர் மு. வ. அவர்களின் 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்', 'ஓவச் செய்தி', 'மாதவி', 'கண்ணகி' என்னும் நூல்கள், இலக்கிய ஆராய்ச்சியின் இனிய பெற்றியினை எடுத்தியம்புவனவாகும். டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் 'ஊரும் பேரும்' என்னும் நூல் ஆராய்ச்சித் துறையில் குறிப்பிடத்தக்கது. இத்துறையில் எண்ணற்ற நூல்கள் வெளிவருகின்றன.

இலக்கிய வரலாறு

பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை தமிழ் நூல்களை ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்த்தார். திருஞானசம்பந்தர் காலத்தை முதன் முதல் வரையறுத்து உதவினார். கோபிநாதராவ், மு. ராகவையங்கார் முதலானோர் மேலும் இத்துறையில் ஊக்கத்துடன் உழைத்தனர். திரு. பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள், 'தமிழ் இலக்கியம்' (Tamil Literature) என்று ஆங்கிலத்தில் ஒரு நூல் செய்துள்ளார். தாகூர் சட்ட நிபுணர் அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் எழுதியுள்ள 'இலக்கிய வரலாறு' இதுவரை இத்துறையில் வெளிவந்த நூல்களில் முதலிடம் பெறத்தக்கது எனலாம். தஞ்சை ஸ்ரீநிவாஸப் பிள்ளை அவர்கள் 'தமிழ் வரலாறு' என்னும் அழகிய நூலை இயற்றியுள்ளார். ரா. ராகவையங்கார் எழுதிய 'தமிழ் வரலாறு' என்னும் நூல், வரலாற்றுக் காலத்தின் தொடக்கப் பகுதியினை விளக்குகிறது. திரு. மு. ராகவையங்காரின் 'ஆழ்வார்கள் கால