பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

தமிழ் இலக்கிய வரலாறு


தமிழ்நாட்டு வரலாறு

தொடக்கத்தில் நம் நாட்டு வரலாறு ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளது. பி. டி. சீனிவாச ஐயங்காரின் 'தமிழர் வரலாறு' (History of the Tamils), எம். சீனிவாச ஐயங்காரின் 'தமிழ் ஆராய்ச்சி ' (Tamil Studies) இராமச்சந்திர தீட்சிதரின் 'வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர்' (Pre-Historic Tamils), கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தென்னிந்திய வரலாறு' (A History of South India) என்பன ஆங்கிலத்தில் எழுந்த நூல்களாகும். திரு. சதாசிவ பண்டாரத்தார் 'பிற்காலச் சோழர் வரலாறு', 'பாண்டியர் வரலாறு' ஆகிய நூல்களையும், டாக்டர் இராசமாணிக்கனார் 'சோழர் வரலாறு', 'பல்லவர் வரலாறு', 'தமிழக வரலாறு' முதலிய நூல்களையும் எழுதியுள்ளனர். அண்மையில் டாக்டர் கே. கே. பிள்ளை அவர்கள், 'தென் இந்திய வரலாற்றினை'த் 'தென்னிந்திய மொழிகள் புத்தகக் குழு' (Southern Languages Book Trust) மூலம் வெளியிட்டார். டாக்டர் மு. ஆரோக்கியசாமி அவர்கள் 'நாமிருக்கும் நாடு', 'தமிழ் நாட்டு வரலாறு' என்னும் நூல்களை எழுதியுள்ளார். பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்கள் 'தமிழக வரலாறு' என்னும் நூலினை எழுதியுள்ளார். தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் முதலாம் இராசராசன். (க. த. திருநாவுக்கரசு எழுதியது) முதலிய பல சிறந்த வரலாற்று நூல்களை வெளியிட்டுவருகிறது.

திறனாய்வு நூல்கள்

திறனாய்வுத்துறை, மேனாட்டார் இலக்கியத்தினாலும் தொடர்பினாலும் வளர்ந்து வருகின்றது. மேலை நாடுகளிலே ஒரு திறனாய்வு நூலுக்கு ஒரு திறனாய்வு நூல் வெளிவரும் முன்னேற்றத்தினைக் காண்கிறோம். தமிழ் நாட்டில் திரு. வ. வே. சு. ஐயர் ஆங்கிலத்தில் எழுதிய 'கம்பராமாயண ரசனை ' (Kampa Ramayana - A Study) இத் துறையில் வழிகாட்டி நூலாகும். ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய 'இதய ஒலி' அடுத்தபடி - - -