பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற்சேர்க்கை

383


குப் பின்னர் இலக்கிய வளம் செழித்து. சிறுகதை, நாவல் முதலிய புதுத்துறைகளைப் பெற்றுச் சிறந்தன. நம் நாட்டின் இலக்கியமும் அச்சு இயந்திரத்தின் அறிமுகத்திற்குப் பின்னரே புதுமை பல பெற்றுப் பொலிவுற்று வளர்ந்தது.

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், தமிழ்நாட்டினர் கல்வி அறிவு பெறுவதும், தமக்குச் சொந்தமாகச் சில நூல்களைப் பெறுவதும் அரிதாக இருந்தன. தமிழர்கள் பனை ஓலையில் எழுதிப் படித்தனர். பனை ஓலையில் எழுதுவதும், எழுதியதை அடிக்கடி எடுத்துப் பயன்படுத்துவதும், அதைப் பாதுகாத்து வைப்பதும் தொல்லை மிகுந்த செயல்களாகும். எழுதப் பயன்படுத்தப்பட்ட பனை ஓலை பக்குவநிலையில் தக்கபடி காய்ந்ததாக இருக்கவேண்டும். அதில் இரும்பு எழுத்தாணிகொண்டு அழுத்தி எழுதவேண்டும். ஓலையில் எழுத்துக்கள் தெரியுமளவு அழுத்தி எழுதவேண்டும். அதே சமயம், எழுத்தாணி ஓலையைக் கிழித்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஓலைகள் ஒரே அளவாக இருக்கவேண்டும். அவற்றில் துளையிட்டு, அதில் நூல் நுழைத்து, அந் நூலால் ஏடுகளைச் சுற்றிக் கட்டிவைக்க வேண்டும். நூலை இறுக்கிக் கட்டினால் சுவடி முறிந்து போகும். ஏட்டைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், அதை மிகக் கவனத்துடன் கையாளவேண்டும். அதன்பின் ஏடுகளைச் செல்லரிக்க விடாமல் கருத்தோடு பாதுகாக்க வேண்டும். இத்தனை தொல்லைகள் மிகுந்த ஏட்டைப் பெற்றுக் கல்வியறிவை வளர்த்துக் கொள்வது அருமையாகவே இருந்தது.

ஒருவரிடமுள்ள ஓர் நூலை மற்றொருவர் பிரதி எடுத்துக் கொள்வது, உழைப்புமிக்க செயலாக அமைந்தது. அதனால் தமிழகத்தில் மொழிவளம் பெறுவதும், நல்ல நூல்கள் எல்லாத் தரத்து மக்களிடையே பரவுவதும் எளிதாக இருக்கவில்லை.

ஓலையில் எழுதும்போது, புள்ளி எழுத்துக்கள் ஓலையைக் கிழித்துவிடும் என்று கருதி, மெய்யெழுத்துக்களைப்