பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்சேர்க்கை

389


1858 இல் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பைக் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, ஆங்கில அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இந்திய விடுதலைப்போர் தொடர்ந்தது. அதில் தமிழரின் பங்கும் வளர்ந்தது. தமிழ்நாட்டின் பாளையக்காரர்கள் சிலர் வெள்ளையரை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினர். சிவகங்கை அரசரான முத்து வடுக நாதர், பாஞ்சாலங்குறிச்சியின் கட்ட பொம்மன், மறவர்குலத் திலகங்களான மருது சகோதரர்கள், புலித்தேவன் முதலானோர் அவ்வப்போது அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி முடிவில் வீழ்ந்தனர். 'வானம் பொழியுது பூமி விளையுது வெள்ளையனுக்கேது கிஸ்திப்பணம்' என்னும் கட்டபொம்மனின் முழக்கம் தமிழரின் உரிமைக் குரலாய் ஒலித்தது.

இந்தியரின் விடுதலைப் போருக்கு, ஆங்கிலேயரில் பரந்த மனமும் மனிதாபிமானமும் கொண்ட சிலர் துணை நின்றனர். அத்தகையோக் 1852இல், 'பிரிட்டிஷ் இந்தியக் கழகம்' (British Indian Association) தொடங்கினர். அதில் இந்தியர்களும் பங்கு கொண்டனர். இக் கழகமே, 28-12-1885 இல், 'இந்தியத் தேசிய காங்கிரஸ்' என்னும் அமைப்பாக உருவாகி, முடிவில் இந்தியா விடுதலை பெறச் செய்தது.

காங்கிரஸ் மெல்ல மெல்ல, ஆனால் மிக உறுதியாக வளர்ந்தது. இந்திய விடுதலைப் போரில் காந்தி அடிகளின் நேரடிப் பங்கு தொடங்கியது. தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தேசிய இயக்கத்தில் பங்குகொண்ட பின் காங்கிரஸின் பலம் பன்மடங்கு பெருகியது. காந்தியடிகளே, வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்தல், வெள்ளையனே வெளியேறு என்னும் இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம் முதலியன நடத்தி முழுச் சுதந்திரம் எனும் இலட்சியத்தை அடையத் துணை செய்தார். அவரது போராட்டத்தில் தமிழரும் பங்கு கொண்டு, உடல் பொருள் உயிரைக் காணிக்கையாக்கி உழைத்தனர். புரட்சிக் கனலாம் வ.வே.சு. ஐயர், தேசிய கவி சி. சுப்பிரமணிய பாரதியார், அவர் பாடல்களை நாடு