பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

பிற்சேர்க்கை


1980

காலம் - மூன்று மணி

மொத்த மதிப்பெண் : 100

[குறிப்பு -

  1. கீழ்க்காணப்பெறும் 'அ'. 'ஆ' என்னும் இரு பிரிவுகள் ஒவ்வொன்றிலும் முதல் வினாவுக்குத் தவறாது விடை தருக.
  2. ஒவ்வொரு பிரிவிலும் பிற வினாக்களுள் ஐந்தனுக்கு விடை தருதல் வேண்டும்.
  3. ஒவ்வொரு வினாவிற்கும் ஒன்றரைப் பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதுக.

'அ'- பிரிவு

  1. திராவிட மொழிகளுள் தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை எழுதுக. 10

அல்லது

தமிழ் நெடுங் கணக்கு வைப்பு முறையை வரைக.
  1. 'ஐ', 'ஒள' - இவ்விரண்டு கூட்டொலிகளைத் தமிழ் இலக்கண நூலார் வழிநின்று விளக்குக.8
  2. உடம்படு மெய்யாவது யாது? அதன் தோற்றத் தினையும், அதனால் மொழி பெற்ற சிறப்பினையும் எழுதுக.8
  3. சங்ககாலத் தமிழ் பற்றிச் சுருக்கி எழுதுக.8
  4. தமிழில் கால இடை நிலைகளை வரலாற்று முறையில் ஆய்க.8
  5. "தமிழில் வேற்றுமை உருபுகள்" என்பது பற்றிக் கட்டுரை வரைக.8
  6. தமிழ்ப் பேச்சு மொழியில் மாவட்டம் தோறும் காணும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சில சான்றுகள் காட்டி விளக்குக.8
  7. "சார்பெழுத்துக்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்துரைக்க.8