பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



89 முத்தொள்ளாயிரம் பெறப்படுகின்றது. ஆகவே, இந்நூல், ஆசிரியர் தொல்காப்பிய னார் கூறியுள்ள ' விருந்து' என்னும் வனப்பிற்கு இலக்கியமா யுள்ளது என்பது அறியத் தக்கது. இதிலுள்ள வெண்பாக்கள் பெரும்பான்மை நான்கடியாலும் சிறுபான்மை ஐந்தாறு அடி களாலும் அமைந்தவை என்பதும் அவற்றுள் கைக்கிளைச் செய் யுட்களே மிகுதியாக இருந்தன என்பதும் தொல்காப்பியச் செய்யு ளியலிலுள்ள 158, 159-ஆம் சூத்திரங்களின் உரையிற் காணப் படும் பேராசிரியரின் குறிப்புக்களால் வெளியாகின்றன. இந் நூலில் இக்காலத்தில் கிடைத்துள்ள நூற்றொன்பது பாடல்களை யும் ஆராயுங்கால், இது முடியுடைத் தமிழ் வேந்தர் மூவ ருடைய நாடு, நகரம், யானை, குதிரை, வென்றி, கொடை முத வானவற்றைப் புகழ்ந்தும், அவர்கள் பெற்ற திறைப்பொருளைச் சிறப்பித்தும், அன்னோரின் பகைப் புலங்களைப் பழித்துமுள்ள பாடல்களையும், சுட்டியொருவர் பெயர் கொண்ட பற்பல கைக் கிளைச் செய்யுட்களையும் தன்னகத்துக்கொண்டது என்பது நன்கு தெளியப்படும். இனி இந் நாலிற் காணப்படும் பழைய வழக்கங்களும் செய்தி களும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கனவாம். அவை, யானை புறப் பட்டுச் செல்லுங்கால் அதற்கு முன்னே பறையறைந்து சென்றமை (9, 62). தமிழ்நாட்டுப் பெண்கள் கூடலிழைக்கும் வழக்கமுடையராயிருந்தமை (73), பிணியுற்றார்க்குப் பிறந்த நாளில் பிணிமிகும் என்னுங் கொள்கையாண்டும் பரவியிருந் தமை (95), அரசர்கள் குடிகளிடம் ஆறிலொரு கடமை பெற்று ஆட்சிபுரிந்து வந்தமை (57), பாண்டியனது குதிரை கனவட்டம் ஒரு சிலர் பழைய உரைகளில் தாம் கண்ட சில பாடல்களை முத்தொன் ளாயிரப் பாடல்கள் என்று வெளியிட்டுள்ளனர்.' அப்பாடல்கள் முத் தொள்ளாயிரத்தைச் சேர்ந்தவை என்பதற்கு அன்னோர் கூற்றே சான்றா வதன்றி வேறு சான்றுகளின்மையின் அவற்றை இந்நூற் பாடல்கள் என்று எங்ஙனம் ஏற்றுக்கொள்ள இயலும்? அன்றியும், அவை முத் தொள்ளாயிரச் செய்யுட்களாயிருப்பின் அச்செய்தியைப் பண்டை உரை யாசிரியர்கள் ஆங்காங்குத் தவறாமல் குறித்திருப்பர் என்பது ஒரு தலை,