பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5. ஆசாரக்கோவை இது கடவுள் வாழ்த்தோடு நூற்றொரு பாடல்களையுடைய ஒரு நூல். இந்நூலின்கண் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடைவெண்பா ஆகிய வெண்பாவகைகள் எல்லாம் காணப்படுகின்றன. இதில் ஒவ்வொரு வரும் தம் வாழ்நாட்களில் மேற்கொள்ளுதற்குரிய முறைகளும் ஒழுக்கங்களும் விலக்கத்தக்க செயல்களும் கூறப்பட்டுள்ளன. இன்னவை செயற்பால என்றும் இன்னவை விலக்கற்பால என் றும் இந்நூல் கூறுவதை நோக்குங்கால், இது வடமொழியி லுள்ள ஸ்மிருதி நூல்களைப்போன்றதொரு நூல் என்பது நன்கு விளங்கும். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள உணவு கொள்ளும் முறை, ஆடையணியும் முறை, நீராடும் இயல்பு, தூங்கும்முறை, படிக்கத்தகாத நாள்கள், நன்மாணாக்கர் செயல் முதலானவற்றை இக்காலத்துள்ள தமிழ்மக்களுள் பலர் ஒப்புக்கொள்ளமாட்டார் கள் என்பது ஒருதலை எனினும், உலகியலை நன்குணர்ந்து உயர் நிலையை எய்த விரும்புவோர் அறிந்து கோடற்குரிய செய்தி களும் இந்நூலில் கூறப்படுகின்றன. ஆகவே, இஃது எல்லோரும் படித்துப் பார்த்தற்குரிய நூல்களுள் ஒன்று எனலாம். இது, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இருப்பதோடு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப் பினைத் தன்பாற் கொண்டதுமாகும். இதன் ஆசிரியர் கயத் தூர்ப் பெருவாயில் முள்ளியார் எனப்படுவார். இவருடைய முன்னோர்கள் கயத்தூரில் இருந்தவர்கள். இவர் வாழ்ந்துவந்த ஊராகிய பெருவாயில் என்பது புதுக்கோட்டை நாட்டில் குளத் தூர்த் தாலூகாவில் இருந்திருத்தல் வேண்டும் என்பது அந் நாட்டிலுள்ள சில கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. இவர் வடமொழியை நன்கு கற்றுத் தேர்ச்சி எய்தியுள்ள ஒரு தமிழ்ப்புலவர் ஆவர். இவர் வடமொழியில் இருடிகள் சொல்ல யுள்ள ஆசாரங்களைத் தொகுத்து ஆசாரக்கோவை என்ற இ தமிழ்நூலை இயற்றியிருப்பதாக இதிலுள்ள சிறப்புப்பாயிர 1. Inscriptions of the Pudukkottai State, No. 442, 518, 525, 8531