பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 தமிழ் இலக்கிய வரலாறு பலி கொடுப்பான்- எண்பதின் மேலும் வாழ்வான் '1 என்னும் அடிகளால் அறியலாம். இவர், திருக்குறள், பழமொழி ஆகிய இரு நூல்களையும் நுணுகி யாராய்ந்தவர் என்பது இவருடைய நூலால் தெள்ளிதிற் புலனாகின்றது. இவர் காலத்திற்குப் பிற் பட்ட புலவர் பெருமக்கள், இவர் நூலை நன்கு பயின்று இதி லுள்ள சொல்லையும் பொருளையும் பெரிதும் போற்றித் தம் தம் நூல்களில் அமைத்துள்ளனர் என்பது அன்னோர் நூல்களால் அறியப்படுகின்றது. இவருடைய ஆசிரியராகிய மாக்காயனாரைப் போல் இவரும் ஆசிரியர் என்று மக்களால் பாராட்டப் பெற்ற பெருமையுடையவர் என்பது உணரற்பாலதாகும். 1. சிறு பஞ்சமூலம் பா. 79.