பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் இலக்கிய வரலாறு மாணாக்கர்கள் என்பது தெள்ளிது. ஆகவே, மதுரைமா நகரில் சமண சமயத்தினர் நடத்தி வந்த தமிழ்ச் சங்கத்தில், உறுப்பின ராக அமர்ந்து, தமிழ் மொழி மூலமாகச் சமயத் தொண்டு புரிந்து வந்த சைனப் புலவருள் இவரும் ஒருவர் ஆவர். இவரைப் பற் றிய பிற வரலாறுகள் தெரியவில்லை. இனி, இவ்வாசிரியர் தம் நூலில் கொல்லாமை, புலாலுண் ணாமை ஆகிய அறங்களைப் பல பாடல்களில் வற்புறுத்தி யிருத் தல்போல் எளியோர்க்கு உணவும் உடையும் வழங்குவோர் அடையும் பயனையும் பன்முறை எடுத்துக் கூறியுள்ளமை அறி யற்பால தொன்றாம். அவை, கூறியது கூறலாகக் காணப்படி னும் அவற்றின் சிறப்பும் பயனும் நோக்கி அங்ஙனம் கூறி யுள்ளனரென்றுணர்க. உலகில் அரசராகப் பிறந்து ஆட்சி புரி வதும், இல்லறத்திலிருந்துகொண்டு மனைவியோடு இன்புற்று வாழ்வதும் மக்களாகப் பிறந்தோர் பெறுதற்குரிய பெரும்பேறு கள் என்பது இவர் கருத்து. இதனை, * பழியிலூண் பாற்படுத்தான்மண்ணாளும் மன்னனாய் மற்று ' (பா. 35) எனவும், ' கூழீந்தான் கொல்யானை யேறி அடிப்படுப்பான் மண்ணாண் டரசு ' (பா. 42) எனவும், ' ஈத்துண்பான் ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய்' - (பா. 44) எனவும், ' தெளிந்தடிசில் ஈத்துண்பான்- மாறான் மண்ணாளுமா மற்று' (பா. 47) எனவும், " ஊணீந்தவர் பல்யானைமன்னராய்எண்ணியூ ணார்வர் இயைந்து ' (பா. 52) எனவும், ( ஊணீந்தார் மாக்கடல்சூழ்நாவலந் தீவாள்வாரே நன்கு ' (பா. 56) எனவும், * எள்ளானீத் துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து' (பா. 46) எனவும் " அன்புற் றசனங் கொடுத்தான் துணையினோ டின் புற்று வாழ்வான் இயைந்து' (பா. 50) எனவும்,