பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இரண்டாம் பதிப்பின் முகவுரை


இவ் விலக்கிய வரலாறு 1955ஆம் ஆண்டில் முதலில் வெளிவந்தது. இதனை யான் எழுத நேர்ந்தமைக்குரிய காரணத்தை முதற் பதிப்பின் முகவுரையில் தெரிவித்துள்ளேன். முதற் பதிப்புப் புத்தகங்கள் செலவாகிவிட்டமையாலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இது பாடமாக வைக்கப்பெற்றிருத்தலாலும் இவ்விரண்டாம் பதிப்பு இப்போது விரைந்து வெளியிடப்பட்டுள்ளது.

இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் அன்புடன் ' புரூப்' திருத்தியுதவிய என் அரிய நண்பர் தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் க. வெள்ளைவாரணர் அவர்கட்கும் எனது நன்றி உரியதாகும்.


அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,

இங்ஙனம்,

அண்ணாமலை நகர்,

T. V. சதாசிவ பண்டாரத்தார்

12—9—57