பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



66 தமிழ் இலக்கிய வரலாறு ஏதுப் பற்றி இவருக்கு வழங்கிய பெயரா என்பது புலப்பட வில்லை . இனி, இவரது நூலாகிய இவ்வைந்திணை எழுபதில் தலை மகள் கூற்றாக அமைந்துள்ள பாடலொன்று உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையதாக உளது. அது, * குறையொன் றுடையேன்மற் றோழி நிறையில்லா மன்னுயிர்க் கேமஞ் செயல்வேண்டு மின்னே யராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில் இராவார லென்ப துரை' என்பதாம். -- ஐந்திணை யைம்பதின் முப்பத்தெட்டாம் பாடலிலுள்ள ' கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி' என்னும் இரண்டடிகளும் இந்நூலில் முப்பத்தாறாம் பாடலில் காணப்படுகின்ற ' கள்ளர் வழங்குஞ் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி' என்ற அடிகளோடு பெரும்பாலும் ஒத்திருத்தல் காணலாம். இவ்விரு நூலாசிரியர்களுள் மாறன் பொறையனார் காலத்தால் சிறிது முற்பட்டவர் எனலாம். ஆகவே, மூவாதியார் என்பார் ஐந்திணையைம்பதை நன்கு பயின்று அதிலுள்ள தொடர்களை அப்படியே தம் நூலில் சில பாடல்களில் அமைத்துக் கொண் டிருத்தல் வேண்டும் என்று கூறுவதில் இழுக்கொன்றுமில்லை. இவர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் ஆவர். 1, ஐந்திணை. எழுபது, பா. 14.