பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



17. முத்தொள்ளாயிரம் இது சேர சோழ பாண்டியர் ஆகிய முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரையும் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு அறம் பொருள் இன்பம் பற்றிப் புகழ்ந்து பாடப்பெற்ற ஒரு பழைய தமிழ் நூலாகும். இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்தது ; ஈரா யிரத்தெழுநூறு பாடல்களை யுடையது ; மூவேந்தரையும் தனித் தனியே தொள்ளாயிரம் தொள்ளாயிரம் பாடல்களில் சிறப்பித் துக் கூறுங் காரணம்பற்றி இது முத்தொள்ளாயிரம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. புறத்திரட்டு என்ற தொகைநூலி லிருந்து இக்காலத்தில் கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல் கள் நூற்றொன்பதாகும். இச் செய்யுட்களின் இனிமையையும், அருமையையும் உணர்ந்த சேதுவேந்தர் அவைக்களப் புலவர் காலஞ்சென்ற ரா. இராகவையங்கார் இவற்றுள் நூற்றைந்து பாடல்களைத் தொகுத்து ' முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் ' என்ற பெயருடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக முதலில் வெளியீட்டனர். இதுகாறும் நூல் முழுமையும் யாண்டும் கிடைக்காமையால் இஃது இறந்துபோன தொன்னூல்களுள் ஒன்று என்பது தேற்றம். இனி, சங்கப்புலவர்களைச் சங்கத்துச் சான்றோர் எனவும் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் நிலவிய புலவர் பெருமக்களைப் பிறசான்றோர் எனவும் பேராசிரியர் தம் தொல்காப்பிய உரையில் குறித்திருப்பதைக் காணலாம். இவ்வுண்மையை ' நெடுவெண் பாட்டே முந்தா லடித்தே-குறுவெண் பாட்டினளவெழுசீரே' என்னுந் தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திரத்தின் உரையில் ' பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியினேறாமற் செய்யுள் செய்தார் பிறசான்றோரும்' என்று பேராசிரியர் கூறியுள்ளவற்றால் நன்கறிந்துகொள்ளலாம். எனவே, முத்தொள்ளாயிர ஆசிரியர் கடைச்சங்கப் புலவர் அல் லர் என்பதும் அச்சங்ககாலத்திற்குப் பிறகு விளங்கியவர் என் பதும் பேராசிரியரது தொல்காப்பிய உரைப்பகுதியால் தெள்ளி திற் புலப்படுதல் காண்க.