பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வையாபுரிப்பிள்ளை

இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்; தமிழ்ச் சுடர் மணிகள், சொற்கலை விருந்து முதலாய நூல்களை எழுதினார். பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு சங்க இலக்கியம் முழுவதையும் இவர் தொகுப்பித்துள்ளார்; இலக்கிய விளக்கம் முதலிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதி வெளியிட்டார்; புதுமை இலக்கியத்தில் இவருக்கிருந்த ஆர்வம் காரணமாக ‘இராஜி' எனும் நாவலையும் ‘சிறுகதை மஞ்சரி’ என்னும் கதைத் தொகுப்பு நூலையும் இயற்றினார்; 1891 முதல் வரை வாழ்ந்தார்.

தமிழறிஞர்கள் பிறர்

தமிழுக்குப் பணியாற்றிய அறிஞர்கள் பலர். நாவலர் சோமசுந்தர பாரதியார், ரா.பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார் முதலியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவார். இவர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆக்கமளித்துள்ளனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களுள் மாரிவாயில் என்னும் செய்யுள் இலக்கியமும் “தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்” எனும் உரைநடை நூலும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1880 முதல் 1959 வரை வாழ்ந்தார்.

ரா. பி. சேதுப்பிள்ளை

இவர் சொற்பொழிவு கேட்பாருள்ளத்தைக் கவரவல்லது. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலியன இவர் சொற்பொழிவுகளில்