பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

இடம்பெறும் நூல்களாகும். இவர் பேச்சும் எழுத்தும் எதுகை மோனைத் தொடை மிக்கன. இன்று பலர் இவரைப் பின்பற்றி வருகின்றனர். இவர் 1896 முதல் 1961வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

மறைமலையடிகள்

இவர் நாகப்பட்டினத்தையடுத்த சிற்றூரொன்றில் பிறந்தார்; இயற்பெயரான வேதாசலம் என்பதன் தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது. தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழியிலும் இவர் புலமை மிக்கவர். தமிழ் நடையில் ஒரு மறுமலர்ச்சியை இவர் உண்டாக்கினார். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முல்லைப் பாட்டாராய்ச்சி, படடினப்பாலை ஆராய்ச்சி எனும் ஆராய்ச்சி நூல்களையும், திருவொற்றியூர் மும்மணிக் கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் எனும் செய்யுள் நூல்களையும் குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள் எனும் நாவல்களையும், சைவ சமய தத்துவ விளக்க நூல்களையும், சிறுவருக்கான நூல்கள் சிலவற்றையும், அம்பிகாபதி, அமராவதி எனும் நாடக நூலையும், தொலைவில் உணர்தல், நூற்றாண்டு வாழ்வது எப்படி முதலிய அறிவியல் நூல்களையும் யாத்துள்ளார்; ஞான சாகரம் எனும் இதழ் ஒன்றனையும் வெளியிட்டு வந்தார். தமிழ் மொழிக்கு இவர் செய்த தொண்டு அளப்பரியது. 1876 முதல் 1950 வரை இவர் வாழ்ந்தார்.

திரு. வி. கல்யாணசுந்தரனார்

திருவாரூர் விருதாச்சலனார் மகன் கலியாணசுந்தர்ன் என்பது இவர் பெயரின் விளக்கமாகும். இன்று அப்பெயர் திரு. வி. க. என வழங்குகிறது. இவர் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு நாடு சுதந்தரம் பெறப் பலவாறு முயன்றார்; தொழிலாளர் நலத்தில் பங்கு கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தார்; எழுத்திலும், பேச்சிலும்