பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

புதுமையைப் புகுத்தி மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தார். இவர் பேச்சுக்கள் ‘தமிழ்த் தென்றல்’ எனும் நூலாக வெளிவந்துள்ளன.

பெண்ணின் பெருமை, காந்தியடிகளும் மனித வாழ்க்கையும், முருகன் அல்லது அழகு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், இந்தியாவும் விடுதலையும் தமிழ்ச்சோலை, உள்ளொளி, சைவத் திறவு முதலிய நூல்களை எழுதி உரைநடை வளர்ச்சிக்கு இவர் புத்துயிருட்டினார்; முருகன் அருள் வேட்டல், இருளில் ஒளி, படுக்கைப் பிதற்றல் முதலிய பல செய்யுள் நூல்களையும் இயற்றினார்; தேசபக்தன், நவசக்தி எனும் இதழ்களையும் வெளியிட்டார்.

டாக்டர் மு. வரதராசனார்

டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் பணியாற்றியுள்ளார்; பழமையை விளக்கியும், புதுமையை வரவேற்றும் கற்றவரையும், மற்றவரையும் தம்பால் ஈர்த்தார். இவரெழுதிய திருக்குறள் தெளிவுரை மிக அதிக அளவில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மொழியியல், திறனாய்வு, நாவல், கட்டுரை முதலாகப் பல துறைகளிலும் நூல்களை எழுதித் தமிழ் இலக்கியத்தை இவர் வளமாக்கியுள்ளார். மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் தோற்றம் 25-4-1913; மறைவு 10-10-74.

டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு வழிகாட்டிய பேரறிரஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். மொழி வரலாறு பற்றிய