பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

நடையில் படைப்பு இலக்கியம் தோன்றக் காரணமாய் அமைந்தது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீராசாமி செட்டியாரின் விநோதரச மஞ்சரியும் தாண்டவராய முதலியார் மொழிபெயர்த்த பஞ்ச தந்திரக் கதையும் சிறுகதையின் தோற்றத்திற்கு வழிவகுத்தன எனலாம்.

தொடக்க காலம்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பத்திரிகைகள் சிறு கதைகளை வெளியிட்டன. தாகூரின் சிறுகதைகளை மொழி பெயர்த்தும், புதுக்கதைகளை எழுதியும் பாரதியார் சிறுகதை இலக்கியத்திற்குத் தொண்டாற்றினார், பாரதியார் எழுதிய தாகூர் சிறுகதைகளும், பாரதியார் கதைகளும் இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

வ. வே. சு. ஐயர் (வாகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்) எழுதிய கதைகள் அடுத்து வெளிவந்தன. அவர் கதைகளுள் எட்டு கதைகள் ‘மங்கையர்க்கரசியின் காதல்’ எனும் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. அதிலுள்ள ‘கதைகளுள் குளத்தங்கரை அரசமரம்’ சிறப்பு வாய்ந்ததாகும். இவர் பாரதியார் காலத்தவர்.

கல்கி

சாரதையின் தந்திரம், வீணை பவானி, ஒற்றை ரோஜா, கணையாழியின் கனவு, அமர வாழ்வு முதலிய சிறுகதைகளைக் கல்கி எழுதியுள்ளார். இவை கல்கி பத்திரிகையில் வெளிவந்தன. இவர் 1899 முதல் 1964 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

புதுமைப்பித்தன்

வ. வே. சு. ஐயர் தொடங்கி வைத்த சிறுகதை மரபு புதுமைப் பித்தனால் வளர்ச்சியுற்றது. வாழ்வின் யதார்த்த நிலையை உணர்த்தவும், கலைப் பொருளைச்