பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

சுவைபடக் கூறவும் இவர் பேச்சுத் தமிழைக் கையாண்டார். இவர் கதைகளில் நாடகப் பண்பும், எள்ளல் சுவையும் மிகுதியாக உள்ளன. இவர் எழுதிய கதைகளுள் சாப விமோசனம், அகல்யை, கயிற்றரவு, காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், மகாமசானம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவர் 1906இல் தோன்றி 1940இல் மறைந்தார்.

கு. ப. ராஜகோபாலன்

புனர்ஜன்மம், கனகாம்பரம், காஞ்சனமாலை எனும் தொகுதிகளில் இவர் கதைகள் வெளியாகியுள்ளன. அவை குடும்ப வாழ்வின் இன்ப துன்பங்களைச் சித்திரிக்கின்றன; உள்ளத்துணர்வுகளை அழகாகப் படப்பிடித்துக் காட்டுகின்றன. இவர் எழுதிய ‘விடியுமா’ என்ற கதை மறக்க முடியாத கதையாகும். மரணப் படுக்கையில் கிடக்கும் கணவனை மருத்துவமனையில் காணும் மனைவியின் துயரைச் சித்திரிக்கும் கதை இது. இவர் 1921இல் மறைந்தார்.

அழியாச் சுடர் என்னும் பெயரில் தம் கதைகளை மெளனி வெளியிட்டுள்ளார். இதழ்கள் என்ற தொகுப்பு நூலை லா. ச ராமாமிர்தம் வெளியிட்டுள்ளார். தி. ஜானகி ராமன் தஞ்சை மண்ணின் மணமுப் அம்மக்கள் பேச்சு ஓட்டமும் அமையக் கதை எழுதுகிறார். நகைச்சுவையும் வஞ்சப் புகழ்ச்சியும் இவரது எழுத்தில் களி நடம் புரியும். கழுகு, சந்துரின் முடிவு, சிவப்பு ரிக்ஷா, அதிர்வு முதலியன இவர் எழுதிய சிறு கதைகளாகும். சாகித்திய அகாதமி இவர் சிறுகதைகளைப் பாராட்டிப் பரிசு தந்துள்ளது. அகிலன், நா. பார்த்தசாரதி, விந்தன் முதலியவர்களும் அரிய பல சிறுகதைகளைப் படைத்துப் புகழ் பெற்றுள்ளனர். ஒரு பிடிச்சோறு, யாருக்காக அழுதான், இனிப்பும் கரிப்பும், அக்கினிப் பிரவேசம் முதலிய கதைகளைச் செயகாந்தன்