பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

நிறைந்த நாவல்களை எழுதினார்கள். ஆரணி குப்புசாமி முதலியார் 1911இல் ‘மதன காந்தி இரத்தினபுரி ரகசியம்’ முதலிய துப்பறியும் கதைகளையும், வடுவூர் துரைசாமி ஐயங்கார் ‘மேனகா', 'கும்பகோணம் வக்கீல்’ எனும் நாவல்களையும், மு. கோதைநாயகி அம்மாள் ‘சண்பக விஜயம்’ எனும் நாவலையும் எழுதினர். இம்மூவரும் சம காலத்தில் வாழ்ந்தனர்.

தேசியமும் சுதந்திரமும்

1927இல் கே. எஸ். வேங்கடாமணி ‘முருகன் ஓர் உழவன்' என்னும் நாவலையும் எழுதினார். இது தேச பக்தியை ஊட்டுவது; காந்தியக் கோட்பாடுகள் நிறைந்தது.

கல்கி

நாவல் வளர்ச்சியில் கல்கியின் பணி மிகப் போற்றத்தக்கது. அவர் எழுதிய ‘கள்வனின் காதலி' ஆனந்த விகடனில் வெளிவந்தது. இது சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது. "அலையோசை" என்னும் நாவலே அவர் இறுதியில் எழுதியதாகும். சுதந்திரத்திற்குப் பிற்பட்ட நாட்டு நிலையை இது சித்திரிக்கிறது.

வரலாற்று நாவல்கள்

பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் முதலியன அவர் எழுதிய வரலாற்று நாவல்களாகும். அவரைப் பின்பற்றிச் சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், நா. பார்த்தசாரதி, விக்கிரமன் முதலியோர் வரலாற்று நாவல்களை எழுதினர். சாண்டில்யனின் கடற்புறா, ஜெகசிற்பியனின் நந்திவர்மன் காதலி. நா. பார்த்தசாரதியின் மணிபல்லவம், விக்கிரமனின்