பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

நந்திபுரத்து நாயகி முதலியன அவற்றுள் குறிப்பிடத்தக்கன.

டாக்டர் மு. வ. அவர்கள் பதின்மூன்று நாவல்களைப் படைத்தார். அவையனைத்தும் குடும்ப வாழ்வையும், சமுதாயச் சிக்கல்களையும் கருவாகக் கொண்டன. செந்தாமரை, கள்ளோ காவியமோ, அகல்விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண் குடிசை முதலியன அவர் எழுதிய நாவல்களுள் குறிப்பிடத்தக்கனவாகும்.

அகிலன் பெண், சிநேகிதி, நெஞ்சின் அலைகள், பாவை விளக்கு, சித்திரப்பாவை, பால்மரக் காட்டினிலே, எங்கே போகிறோம் முதலிய தலைசிறந்த நாவல்களைப் படைத்தார்; தாம் எழுதிய சித்திரப்பாவைக்காக ஞானபீடம் பரிசினைப் பெற்றார்.

ஜெயகாந்தன் தமிழ் நாவல்களுள் புதுமையும், இலக்கியத் தரமும், கருத்தோட்டமும் மிக்க நாவல்களை எழுதி வருபவர். சில நேரங்களிம் சில மனிதர்கள், பாரிசுக்குப் போ, சினிமாவுக்குப்போன சித்தாளு, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன், அட சும்மா கிட புள்ளே, ஊருக்கு நூறு பேர், ஜெய ஜெய சங்கரா முதலிய நாவல்களை இவர் எழுதியுள்ளார். மேலும் தொடர்ந்து எழுதும் தலைசிறந்த எழுத்தாளர் இவர்.

நா. பார்த்தசாரதி கல்கியின் பணியைப் பின்பற்றி எழுதினார்; சத்திய வெள்ளம், ஆத்மாவின் ராகங்கள், நெஞ்சக் கனல், நெற்றிக்கண் முதலிய சமுதாய விமரிசன நாவல்களை எழுதியுள்ளார். இலட்சிய மாந்தர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட குறிஞ்சி மலரும், பொன் விலங்கும் இவருடைய அற்புதப் படைப்புகள்.

நீல. பத்மநாபனின் உறவுகள், தலைமுறைகள், பள்ளி கொண்டபுரம் ஆகியவை சிறந்த நாவல்களாம். இராஜம்