பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் படகர் வாழ்க்கையைச் சித்திரிப்பதாகும். இலட்சுமியின் பெண்மனம், ரகுநாதனின் பஞ்சும் பசியும், ராசியின் நனவோட்டங்கள், ஜானகி ராமனின் அம்மா வந்தாள் முதலியன குறிப்பிடத்தக்க சிறந்த நாவல்களாகும்.


இதழ்களின் வளர்ச்சி

இதழ்கள் தமிழ்மொழி வளர்ச்சியிலும் இலக்கிய வளர்ச்சியிலும் சிறப்பிடம் பெறுகின்றன. நாளிதழ், வார இதழ், திங்கள் இதழ் என இவை பலவகைப்படும், இவ்விதழ்கள் செய்திகளைத் தருவதோடு தலையங்கங்களும், சிறு கதைகளும். நாவல்களும் வார இதழ்களிலும் திங்கள் இதழ்களிலும் இடம்பெறுகின்றன. மற்றும் சிறுவர்களுக்கான தனி இதழ்களும், மகளிர்க்கு எனத் தனி இதழ்களும் வெளிவருகின்றன.

தமிழில் வெளிவந்த முதல் இதழ் சுதேசமித்திரனாகும். அது 1883ஆம் ஆண்டு ஜி. சுப்பிரமணிய ஐயர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வார இதழாக வெளிவந்தது; 1888ஆம் ஆண்டு முதல் நாளிதழாக மாறியது.

திரு. வி. கலியாணசுந்தரனார் தேசபக்தன், நவசக்தி எனும் இரண்டு நாளிதழ்களை நடத்தினார். அடுத்துக் குறிப்பிடத்தக்க நாளிதழ் தினமணியாகும். டி. ஏ. சொக்கலிங்கம் முதலில் இதன் ஆசிரியராக விளங்கினார். அடுத்து ஏ. என். சிவராமன் பணியாற்றிவந்தார்.

சி. பா, ஆதித்தனாரை ஆசிரியராகக் கொண்ட தினத்தந்தி 1942ஆம் ஆண்டு முதல் வெளிவருகிறது. எளிய தமிழில் உணர்ச்சிகளைத் துண்டும் வகையில் கவர்ச்சி மிக்கதாக விளங்குவதால் இஃது அதிக அளவில் விற்பனையாகிறது. நாட்டு நடப்புகளைத் தக்க படங்களாலும், தலைப்புகளா