பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

லும் விளக்குகிறது. இதே செய்திகளை மாலை முரசும் தருகிறது. முன்னது காலையிதழ்; பின்னது மாலையிதழ்.

மக்கள்குரல், மக்கள் செய்தி, தினகரன் முதலிய நாள் ஏடுகள் இப்பொழுது அரசியல் விமரிசனங்களைத் தாங்கி வெளிவருகின்றன. முதல் தமிழ் நாளிதழான சுதேசமித்திரன் இப்பொழுது வெளிவரவில்லை.

பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் குடியரசு, விடுதலை எனும் இரண்டு நாளிதழ்களை நடத்தினார். இன்று அரசியல் உணர்வுகள் பெருகிவிட்ட காரணத்தால் கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழ்களும் வார இதழ்களும் வெளிவருகின்றன. ஜனசக்தி பொதுவுடமைக் கட்சிப் பத்திரிகையாகும்; முரசொலி தி. மு. க.வின் பத்திரிகையாகும்; ‘அண்ணா’ அண்ணா தி.மு.க.வின் பத்திரிகையாகும்.

ஆனந்தவிகடன் 1928 முதல் வார இதழாக வெளிவருகிறது. ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் 1941 ஆகஸ்டில் கல்கி எனும் வார இதழைத் தொடங்கினார். இன்று தமிழ் வார இதழ்களுள் மிகுதியாக விற்பனையாவது குமுதமாகும். தினமணிகதிர், தராசு, குங்குமம், இதயம் பேசுகிறது. நக்கீரன், ஜூனியர் விகடன் முதலான வார இதழ்கள் இப்பொழுது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

திங்கள் இதழ்களுள் இலக்கிய இதழாகச் செந்தமிழ்ச் செல்வி வெளிவருகிறது; தீபம் பார்த்தசாரதி வெளியிட்ட 'தீபம்' சிறந்த இலக்கிய விமரிசன இதழாகும்.

அழ. வள்ளியப்பாவின் பூஞ்சோலை, மற்றும் அம்புலி மாமா, கல்கண்டு, பொம்மை வீடு முதலான இதழ்கள் சிறுவர்களுக்காக வெளிவருகின்றன.

ஜீ. ஆர். தாமோதரன் அவர்கள் கலைக்கதிர் என்னும்