பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

மரம், விலங்கு, பறவை. தொழில், இசை முதலியவை கருப் பொருள்களாகும். நிலம், குறிஞ்சி (மலை). முல்லை (காடு) பாலை, மருதம் (வயல்), நெய்தல் (கடல்) என ஐவகைத் திணைகளாக அமைந்தன. இவ்வாறே புறத்திணைகளும் திணைப் பாகுபாட்டைப் பெற்றன. அவை வெட்சி, கரந்தை. நொச்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என ஒன்பது வகைப்படும். அகத்திணை, புறத்திணை இரண்டும் பல துறைகளைத் தம்மகத்தே கொண்டன.

சங்க நூல்கள்

சங்க இலக்கியங்களுள் ஒரு பகுப்பாகிய எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை எனும் ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன. அவற்றுள் அகநானூறு 13 முதல் 31 அடிவரை உள்ள 400 பாடல்களைக் கொண்டது. நற்றிணை 9 முதல் 12 அடி வரை உள்ள 400 பாடல்களைக்கொண்டது. குறுந்தொகை 4 முதல் 8 அடிவரை உள்ள 400 பாடல்களைக் கொண்டது. ஐங்குறுநூறு 3 முதல் 5 அடிவரை உள்ள 500 பாடல்களைக் கொண்டது. இவை அடிவரையறையால் பாகுபாடு செய்யப்பட்டவை. கலித்தொகை கலியோசை தழுவிய 150 பாடல்களைக் கொண்டது.

பரிபாடல் என்பது இசை பற்றி அமைந்த பெயராகும். 70 பாடல்களுள் கிடைத்துள்ளவை 32 ஆகும். இவற்றுள் அகப் பாடல்களும் உண்டு; புறப்பாடல்களும் உண்டு. பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருளைப் பற்றியவை. பத்துப் பத்தாகப் பாடப்பட்ட சேரவேந்தர் பதின்மரைப் பற்றிய நூறு பாடல்களைக் கொண்டது பதிற்றுப்