பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பத்தாகும். அவற்றுள் முதற்பத்தும் இறுதிப்பத்தும் இன்று கிடைக்கவில்லை. தமிழக மன்னர்கள், சிற்றரசர்கள். கொடை வள்ளல்கள், வீரர்கள் முதலானோரின் செயற்கு அரிய செயல்களையும், உயர் பண்புகளையும் கூறுவது புறநானூறாகும். வாழ்க்கை உண்மைகளை எடுத்துரைக்கும் பாடல்களும் இதில் உண்டு.

எட்டுத் தொகை

நற்றிணை , தல்லதிணை என்பது இதன் பொருளாகும்; இதன் பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். 'முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' என்றும், “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வமன்று; தம் செய்வினைப் பயனே” என்றும், 'சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர் புன் கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம்' என்றும் வரும் தற்றிணைத் தொடர்கள் குறிப்பிடத்தக்கன. இதில் வரும் உவமை அழகு நம் உள்ளத்தைக் கவர வல்லது, 'நின்ற சொல்லர் நீடு தோன்று இனியராக' விளங்கும் தலைவரின் நட்பின் திறத்திற்குச் சந்தன மரத்தின் உயரத்தில் தொகுத்து வைத்த தாமரை மலர்த் தேனை உவமையாகக் காட்டுகிறாள் தலைவி ஒருத்தி.

‘நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என்தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை'

குறுந்தொகை

இது ' நல்ல குறுந்தொகை' என்று சிறப்பிக்கப்படுகிறது. இதன் பாடல்களை இருநூற்றுக்கும் மேற்பட்ட