பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

இதன்கண் ஒவ்வொருதிணையும் பிரிவுக்குப் பத்துப் பாடல்களாகப் பத்துப் பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவும் வேட்கைப் பத்து, வேழப்பத்து எனத் தனித்தனித் தலைப்புகளைப் பெற்றுள்ளன. பிற்காலத்தில் மணிவாசகரும் பிடித்த பத்து, வாழாப் பத்து எனப் பத்துப் பத்தாகப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைமகள் ஒருத்தி தன் தலைவனுடன் உடன் போக்காகச் சென்று விடுகிறாள். அதனை அறிந்த தாய் அவளைத் தேடி வருமாறு பலரையும் போக்கினாள்; அவர்களோ அவளைக் காணாது வறிதே திரும்பினர். தன் அருமை மகளை விட்டு ஒரு நாளும் பிரியாத தாய்க்கு மகளின் பிரிவு எல்லையற்ற துன்பத்தை அளித்தது. குழந்தைப் பருவத்திலிருந்து தன் மகள் விளையாடிய பாவை, அவள் வளர்த்த கிளி, பூவை முதலியவற்றை நோக்கி நோக்கி மளம் குழைந்து ஏங்கி வருந்துகிறாள் அவள்.

'இது என் பாவை பாவை; இது என்
பூவைக்கு இனிய சொற் பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரும் சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி என்று இவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கின னேஎன் பூங்க ணோளே!'

கலித்தொகை

பாலைக் கலியைப் பெருங்கோவும், குறிஞ்சிக் கலியைக் கபிலரும், மருதக் கலியை மருதனிள நாகனும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினர்.

நாடகப் போக்கிலமைந்த இனிய பாடல்களை இந் நூலில் காணலாம். கலியோசை நிறைந்த இசைப் பாடல்களைக் கொண்ட இந் நூல் ' கற்றறிந்தார் ஏத்தும் கலி'