பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

என்றும், 'கல்விவலார் கண்டகலி' என்றும் போற்றப் படுகிறது.

தலைவி, தன் காதலனுடன் சென்றுவிடுகிறாள். அதனை அறிந்த தாய் கலங்கி வருந்துகிறாள். அவளுக்கு ஆறுதல் கூறும் அறிஞர் ஒருவரின் அறிவுரை தக்க உவமைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

அம்மையே! சந்தனம் மலையில் பிறந்தாலும் மலைக் கென்ன பயன்? பூசிக்கொள்பவர்க்கன்றோ அது பயன்படுகிறது! முத்துக் கடலில் பிறந்தாலும் கடற்கென்ன பயன்? அணிபவர்க்கன்றோ அது பயன்படுகிறது. இசை யாழில் பிறந்தாலும் யாழுக்கு என்ன பயன்? கேட்பவர்க் கன்றோ பயன்படுகிறது! அவைபோல நின்மகளும் உனக்குப் பயன்படாமல் மற்றொருவனுக்கு உரிமையாகி விட்டாள்.'

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையனே
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

'

அகநானூறு

இதன்கண் அகப் பொருட்செய்திகள் மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன; அழகிய வருணனைகளும், வரலாற்றுச்