பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

வண்ணம், தூக்கு, பெயர் முதலிய செய்திகள் தரப்பட்டுள்ளன. பாட்டின்கண் இடம் பெற்றுள்ள ஒரு சிறந்த தொடரே ஒவ்வொரு பாட்டிற்கும் தலைப்பாக (பெயராக) அமைந்துள்ளது.

பூத்த நெய்தல், கூந்தல் விறலியர், கயிறு குறுமுகவை, செங்கை மறவர் , சில்வளை விறலி, ஏறாஏணி போன்றவை தலைப்புகளாக விளங்குகின்றன.

சேரமன்னர் தம் சிறப்பையும், செல்வாக்கையும் அறிவதற்குப் பெருந்துணை புரியும் இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுள்ளது.

'ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோடு ஆயிடை
மன்மீக் கூறுநர்' பத்து-1
 
ஓவத் தன்னை வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள்

பத்து-61


போன்ற அடிகள் அழகிய சொற் சித்திரங்களாக அமைகின்றன.

புறநானூறு

இது சங்க நூல்களுள் தலையாயதும் வரலாற்றுச் சிறப்புடையதுமாக விளங்குகிறது. அறம், பொருள், வீடு எனும் புறப்பொருள் பற்றிய 400 பாடல்களைக் கொண்டுள்ளது. இதன் பாடல்களை ஏறத்தாழ 160 புலவர்கள் பாடியுள்ளனர்.

தமிழர் வாழ்வினையும், நாகரிகத்தினையும் அறிய இந்நூல் பெரிதும் துணை செய்கிறது. இது கிடைக்கப் பெறாதிருப்பின் பண்டைத் தமிழக வரலாற்றை அறிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். தமிழரின் வீரம், கொடை,