35
அவன் கோலினும் தண்ணிய' என்னும் தொடரும் விளக்குகின்றன.
கரிகாலன் ஆட்சியைப் பெற்ற திறமும், அவன் வெற்றிகளும், காவிரிப்பூம் பட்டினத்து வணிகச் சிறப்பும் இதில் மிகுதியாக விளக்கப்படுகின்றன.
தொன்மைச் சிறப்பு
நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களுள் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களுமே தொன்மை வாய்ந்தவை. இவை பிற நாட்டின் தாக்குதலால் தோன்றியவை அல்ல; மக்கள் வாழ்க்கையினின்று தாமே முகிழ்த்து எழுந்தவை. பண்டைக் காலத் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்க்கை நடத்தினர். அவ்வாழ்க்கையின் பிரதிபலிப்பே சங்க நூல்களாகும். எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூல்களேயன்றி அவற்றிற்கு முற்பட்ட தொல்காப்பியம் தமிழின் தொன்மைக்குச் சான்று பகரும்.
அகமும் புறமும்
சங்க இலக்கியங்கள் அனைத்தும் அகம், புறம் எனும் இரு பெரும்பிரிவுகளுள் அடங்கும். வாழ்க்கையின் உயிர் நாடியாகிய காதலும், போரும் சங்கப் பாடல்களில் சித்திரிக்கப்படுகின்றன. எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுத்தொகை, ஐங்குறுநூறு. கலித்தொகை, அகநானூறு எனும் ஐந்தும் அகத்திணை நூல்களாகும். பத்துப் பாட்டுன் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை தவிர ஏனைய ஏழும் புறப் பாடல்களாகும். இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்துள்ளன. பரிசில் பெற்ற கலைஞன் ஒருவன் பெறாத