பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வர்க்கு அறிவுறுத்தி ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படையாகும். அது புறத்துறைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வேந்தர்கள் கலைஞர்களைப் போற்றிய திறம் ஆற்றுப் படைகளால் தெளிவாகப் புலப்படுகிறது.

உரிப்பொருளின் சிறப்பு

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் மூன்றும் அகப்பொருள் பாடல்களுள் இன்றியமையாதனவாகும்; நிலமும், பொழுதும் முதற் பொருளாகும். தெய்வம், உணவு , மரம், விலங்கு, தொழில், யாழ், பண், மலர், பறவை முதலியன கருப் பொருள்களாகும். உரிப்பொருள் இவ்விரண்டினையும் பின்னணியாகக் கொண்டு விளங்குகிறது. புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்பன முறையே குறிஞ்சி, பாலை, முல்லை; மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளுக்குமுரிய உரிப்பொருளாகும். இம்மூன்றனுள் உரிப்பொருளே - சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இயற்கைக்காக இயற்கையைப் பாடும் மரபினைச் சங்க இலக்கியங்களில் காண இயலாது.

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை"

(தொல்.அக, 8)

தன்மை நவிற்சி

இல்லது புனைதல் என்பதனைச் சங்க இலக்கியத்தில் காண முடியாது. உள்ளதை உள்ளவாறு கூறிச் சங்க காலப் புலவர்கள் மன நிறைவு பெற்றனர். உண்மை நிகழ்ச்சிகளை அழகுபடக் கூறி அழகுணர்வை வெளிப்படுத்தினர்.