பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி
நல்லை வாழிய நிலனே'

என்ற வரிகள் மக்களின் சிறப்பால் தான் நாடு உயர்வு பெறுகிறது என்பதைக் காட்டுகின்றன .

"'முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்'

என்பது அக்கால மக்களின் பண்பாட்டுச் சிறப்பை விளக்குகிறது.

'வினையே ஆடவர்க்கு உயிரே! வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'

இல்லத் தலைவனுக்குத் தொழிலே உயிராம்; மனை உறை மகளிர்க்குந் தலைவனே உயிராம்; வினைக்கு ஆண்: காதலுக்குப் பெண் என்ற கோட்பாடு அவர்கள் வாழ்க்கையில் மிளிர்கின்றன.

அரசர்களுள் புலவர்கள்

அரசர்களும் தம் புலமையை அரிய பாடல்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். குறுகுறு நடந்தும், சிறு கை நீட்டியும், இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும் குழந்தை மயக்குகிறது என அறிவுடை நம்பி விளக்கி இருப்பது கற்பார் மனத்தைக் கவர வல்லது. இளம்பெரு வழுதி, சோழள் நல்லுருந்திரன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாய வேந்தர் பலரும் பாடியுள்ளனர்.

பெண்பாற் புலவர்கள்

அதிகனின் உயிர் நண்பராக விளங்கிய அவ்வையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. காக்கை பாடினியார், நச்செள்ளையார், பொன்முடியார், பெருங்கோப்பெண்டு, ஆதிமந்தியார் முதலிய