பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களும் மிகச் சிறந்தனவாகும்.

யாப்பு

அகவல், கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா இந்நால்வகைப் பாக்களே சங்க காலப் பாடல்களாகும், அகவற்பாவுக்கே அன்றைய புலவர்கள் முதலிடம் தந்தனர். ஓசைக்கு அவர்கள் முதன்மை தரவில்லை. உரை நடையே ஒலி நயம் பெற்று அழகாக இயங்கியபோது அது பாட்டாயிற்று: பிற்காலக் கவிஞர்கள் சந்தங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதனால், கருத்துக்கும். தக்க சொல்லாட்சிக்கும் சிறப்புத் தர இயலாமல் போய்விட்டது. அகவலும், செப்பலும், தூங்கலும், துள்ளலும் ஆகிய இவ்வோசைகளையே தம்பாடல்களில் கையாண்டனர்.

மரபுகள்

சங்க இலக்கியங்கள் சிறந்த இலக்கிய மரபுகளைக் கொண்டுள்ளன. அகப்பொருள், புறப்பொருள்கள் மரபு மீறாமல் விளங்குகின்றன. புலவர்கள் எண்ணிக்கையில் மிக்கு இருந்தும் அனைவரும் மரபுக்குக் கட்டுப்பட்டே பாடினர்.



3. சங்கம் மருவிய காலம்


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு மேல்கணக்கு நூல்கள் எனப்படும். தாலடி முதலாகக் கைந்நிலை ஈறாகப் பதினெட்டு நூல்களும் கீழ்க்கணக்கு எனப்படும்.