பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சங்க காலம் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலமாகும். அதனை அடுத்துத் தோன்றிய இலக்கியங்கள் புதியதொரு மரபினைக் கொண்டுள்ளன. அவ்விலக்கியங்களைச் சங்கம் மருவிய நூல்கள் என்பர். நீதி நூல்கள் சிலவும். அகப்பொருள் புறப்பொருள் பற்றிய நூல்கள் சிலவும், இக்காலத்தில் தோன்றின. இவையே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி கால் கொண்டது. அக்காலத்தில் சங்க இலக்கியம் போன்ற குறிக்கோள் இலக்கியங்கள் வளரவில்லை. பெரும்பாலும் நீதி நூல்களே எழுந்தன. வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, மருட்பா என்னும் பா வகையால் 50 முதல் 500 அடி வரையுள்ள செய்யுள்களை மேல் கணக்கு என்பர்.

கணக்கென்பது இலக்கியம். என்னும் பொருளது; அறம், பொருள், இன்பம் எனும் மூன்றையும் ஐந்தடிகளுக்கு மிகாத செய்யுள்களால் அடுக்கிச் சொல்லுதல் கீழ்க்கணக்காகும், இவை பெரும்பாலும் வெண்பா வகையினவே.

அடிநிமிர் பில்லாச் செய்யுள தொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்.

பன்னிருபடலம்

1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இனியவை நாற்பது, 4. இன்னா நாற்பது, 5. கார் நாற்பது, 9. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. ஐந்திணை எழுபது, 9. திணைமொழி ஐம்பது. 10. திணைமாலை நூற்றைம்பது 11. திருக்குறள், 12. திரிகடுகம், 13. ஆசாரக்கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக்