பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

இறுதியில் ஒவ்வொரு பழமொழி இடம் பெறுவதால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதன்கண் 400 வெண்பாக்கள் உள்ளன.

'உரை முடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப- நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன்; குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

15. சிறுபஞ்ச மூலம்

இதன் ஆசிரியர் காரியாசான். கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி எனும் ஐந்து வேர்கள் உடல் நோயைப் போக்குவது போல, இதன் செய்யுள்கள் ஒவ்வொன்றிலும் தரப்படும் ஐந்து செய்திகள் மக்களது மனநோயைப் போக்குதலின், இஃது இப்பெயரைப் பெற்றது.

'மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
பல்லின் வனப்பும் வனப்பல்ல: நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு'

16. முதுமொழிக் காஞ்சி

இதன் ஆசிரியர் கூடலூர் கிழார். செய்யுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முதுமொழி இடம் பெற்றுள்ளமையால் இஃது இப்பெயர் பெற்றது.

"'ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை'

17. ஏலாதி

இதன் ஆசிரியர் கணிமேதாவியார், இது கடவுள்