பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வாழ்த்துடன் சேர்த்து எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டது. ஏலம், இலவங்கப்பட்டை , சிறு நாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆறும் உடலுக்கு நன்மை தருவது போல, இதன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் ஆறு உறுதிப் பொருள்களும் உயிர்க்கு நன்மை செய்தலின் இஃது இப்பெயர் பெற்றது.

"கொல்லான்; கொலைபுரியான்; பொய்யான்; பிறர்மனைமேல்
செல்லான்; சிறியார் இனம்சேரான்;-சொல்லும்
மறையிற் செவியிலன்; தீச்சொற்கண் மூங்கை;
இறையிற் பெரியாற் கிவை”

18. கைந்நிலை

இதன் ஆசிரியர் புல்லங்காடனார். இதன்கண் நாற்பத்தைந்து பாடல்கள் உள்ளன. அவை திணை அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன.

காந்தள் பூவினைப் புகை என்று கருதிக் களிறு ஒன்று. தன் கூட்டத்தை நோக்கி ஓடுகிறதாம். '

'காந்தள் அரும்புகை என்று கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனன் நோக்கிப்
பாய்ந்தெழுந் தோடும் பயமலை நன்னாடன்'

பொருள் பாகுபாடு

இவற்றுள் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது எனும் ஆறும் அகப்பொருள் பற்றியன. களவழி நாற்பது மட்டும் புறப்பொருள் பற்றியது. ஏனைய பதினொன்றும் நீதி பற்றியன.

பிற நூல்கள்

சிலப்பதிகாரம்

கண்ணகியின் காற்சிலம்பைக் கதைக்குக் கருவாகக்