பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

திருமந்திரம்

இதனை இயற்றியவர் திருமூலராவார். இது பத்தாம் திருமுறையாகக் கருதப்படுகிறது. 3090 பாடல்களைக் கொண்டது; யாக்கை நிலையாமை முதலானவற்றை விளக்கிக் கூறி வீடுபேற்று நெறியினை விளக்குவது. இதில் இன்று ஒன்பது தந்திரமென 232 அதிகாரங்கள் திகழ்கின்றன பாடல்களின் எண்ணிக்கை 3071.

திருமூலர் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியினர் என்பர். இவர் நெளிவான நடையில் நகைச்சுவையும் ததும்பப் பாடல்களை இயற்றியுள்ளார்.

'மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்'

இப்பாடல்களில் உயர்ந்த கருத்துகள் மிளிர்வதைக் காணலாம்.



4. பல்லவர் காலம்
(கி.பி. 600 - 900)


சிலப்பதிகாரம், மணிமேகலைகளுக்குப் பின் இடைக்காலத்தில் தமிழகம் இலக்கிய வளர்ச்சி குன்றி இருளடைந்து கிடந்தது. பாலியும், பிராகிருதமும் செல்வாக்குப் பெற்றன. சமணமும், பௌத்தமும் தழைத்தன, இக்காலத்தில் களப்பிரர் தமிழகத்தை ஆண்டனர். இரண்டு நூற்றாண்டு