பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

களுக்கு மேல் இந்நிலை நீடிந்தது. பாண்டியன் கடுங்கோன் உள்ளிருந்து எதிர்த்தான். வடக்கேயிருந்து பல்லவர்கள் படை எடுத்தனர்; களப்பிரர் ஆட்சி வீழ்ச்சி உற்றது.

தமிழ் இசையும், சைவ வைணவ சமயங்களும் தழைத்து ஓங்குவதற்குப் பலலவர் ஆட்சி வழிவகுத்தது. மக்கள் இன்னிசையால் தமிழ்பாடி இறைவனை வாழ்த்தி வணங்கினர்.

பன்னிரு திருமுறைகள்

சைவமும், வைணவமும் தழைத்தன. இறைவற்குப் பணி செய்த தொண்டர்களுள் தலை சிறந்தவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களுமாவர். நாயன்மார் அறுபத்து மூவர்; ஆழ்வார்கள் பன்னிருவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். மாணிக்கவாசகர், சேந்தனார், திருமூலர், காரைக்காலம்மையார் முதலியோர் இயற்றிய பாடல்களைப் பத்தாம் நூற்றாண்டில் இராசராசனின் வேண்டுகோட்கு இணங்கி நம்பியாண்டார் நம்பி என்பவர் பதினொரு திருமுறைகளாகத் தொகுத்துத் தந்தார். பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமும் சேர்ந்து சைவ சமய குரவரின் திருமுறைகள் பன்னிரண்டாயின.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். மாணிக்கவாசகர் எனும் நால்வரும் சைவசமயக் குரவர் எனப் பெற்றனர், முதல் மூவரும் பாடிய பாடற்றொகுதி தேவாரம் எனப்பட்டது. மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம் எனப்பட்டது.

திருஞானம்பந்தர்

இவர் சீகாழிப்பதியில் சிவபாத இருதயருக்கும், பகவதி