பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. சோழர் காலம்
கி.பி. (800-1200)

காப்பியங்கள்

பல்லவர் காலம் சைவ, வைணவ இலக்கியங்களுக்கு வழிகோலியது; சோழர் காலத்தில் திருத்தக்க தேவர். சேக்கிழார், கம்பர் முதலிய மாபெருங் கவிஞர்கள் தோன்றி அழியா இலக்கியங்களைப் படைத்தனர்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை சோழர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் காலத்தில் கலையும், இலக்கியமும் புத்தொளி பெற்றன. சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாகத் தஞ்சைப் பெரிய கோயிலைக் குறிப்பிடலாம். இக்காலத்தில் பெளத்த சமண, வைணவ, சைவ சமயங்கள் வளர்ந்தன.

காப்பியத்தின் அமைப்பு

காப்பியம் என்பது அறம், பொருள் இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களைக் கூறும். மலை, கடல், நாடு, நகர், பொழுது, ஞாயிறு, திங்கள் இவற்றின் வருணனையைக் கொண்டு விளங்கும், தன்னிகரில்லாத தலைவன் இடம் பெறுவான். நீர் விளையாட்டு, சோலை விளையாட்டு, மணவாழ்வு, மக்கட்பேறு முதலியனவும் அமையும். அரசியல், அமைச்சியல், போர், தூது, பயணம் வென்றி முதலிய இடம் பெறும். சருக்கம், இலம்பகம், படலம் முதலிய பிரிவுகளைப் பெறும், அணிநலன் மிக்கும், சந்த நயம் பெற்றும் இதன் பாடல்கள் இயங்குகின்றன.

ஐம்பெரும் காப்பியங்கள்

தமிழில் தோன்றிய காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள் எனவும், ஐஞ்சிறு காப்பியங்கள் எனவும்

த-6