பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

துள்ளன. நூலாசிரியர் பெயரும் அவர் வாழ்ந்த காலமும் அறியக்கூடவில்லை. இதன் பாடல்கள் யாக்கை நிலையாமை, கற்புடைய மகளிர், கற்பில் மகளிர்; விரதத்தின் வகை, அருளுடைமை, புலால் மறுத்தல் முதலியவை பற்றிக் கூறுகின்றன.

5. குண்டலகேசி

இது பெளத்த சமய நூல். இதன் பாடல்கள் இனிய ஓசையும் பொருள் நயமும் கொண்டுள்ளன. இவற்றுள் சில பாடல்களே கிடைத்துள்ளன.

பாளையாந் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்தும், காமுறும்- இளமை செத்தும்
மீளுமிவ் வியல்பும் இன்னே மேவரு மூப்புமாகி
நாளும்நாள் சாகின் றேமால் நமக்குநாம் அழாத தென்னே

இச்செய்யுள் நிலையாமையை அழகுபடக் கூறுதல் காண்க.

ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் எனும் இவ்வைந்தம் ஐஞ்சிறு காப்பியங்களாகும்.

1. சூளமாணி

இதன் ஆசிரியர் தோலாமொழித்தேவர். இஃது ஓசை நயத்தில் சிந்தாமணியையும் வெல்வது என்பர். சங்க காலத்துக்கும், தேவார காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தே இந்நூல் தோன்றி இருக்க வேண்டும்.

2. நீலகேசி

இது ‘நீலகேசித் தெருட்டு' எனவும் வழங்கப்படுகிறது. குண்டலகேசி என்னும் பெளத்த காப்பியத்திற்கு எதிராக