பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தண்டியலங்காரம்

காவியதர்சம் என்னும் வடமொழி நூலைத் தழுவி இது தமிழில் எழுதப்பட்டது. இதன் காலம் 12 ஆம்' நூற்றாண்டு. இஃது அணியிலக்கணத்தை அழகு பெறக் கூறுகிறது. காப்பிய இலக்கணமும் இதில் இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியம் உவமையணி ஒன்றனையே கூறிச்செல்ல, இஃது ஏனைய அணிகளையும் விளக்கிச் செல்கிறது; பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.



6. நாயக்கர் காலம்
(கி.பி. 1350—1750)


சோழப் பேரரசு பதின்மூன்றாம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது; பாண்டியர் தலையெடுத்தனர்; பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலாவுதின் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக்காபூர் படையெடுத்து வந்து பாண்டியரை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான். அதனால், தமிழகத்தில் மகமதியர் ஆட்சி கால்கொள்ளத் தொடங்கியது.

ஆந்திர நாட்டில் விசயநகர ஆட்சி ஏற்பட்டபின் மகமதியர் ஆட்சி வலிமை குன்றியது. விசயநகர வேந்தர்களின் பிரதிநிதிகளாக நாயக்கர்கள் மதுரையில் ஆட்சி செலுத்தினர். அவர்கள் ஆட்சி நானூறு ஆண்டுகள் நிலவியது.

சைவசித்தாந்த நூல்கள்

பல்லவர் காலத்தில் தேவாரமும், திவ்வியபிரபந்தங்களும் தோன்றிப் பக்தி உணர்வை வளர்த்தன. நாயக்கர்