பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

காலத்தில் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றின. அவை பதி, பசு, பாசம் பற்றிய விளக்கங்களைத் தருகின்றன.

அவற்றுள் குறிப்பிடத்தக்கன திருவுந்தியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், உண்மை விளக்கம் முதலியனவாகும். இவற்றின் காலம் 11 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை எனலாம்.

இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள்

இளம்பூரணர்

தொல்காப்பியம் முழுவதற்கும் முதன் முதலில் உரை எழுதியவர் இளம்பூரணரே ஆவர். அதனால் இவரை ‘உரையாசிரியர்' என்று அழைப்பர். இவர் உரை தெளிவும், எளிமையும். அழகும், சுருக்கமும் வாய்ந்ததாகும். இவர் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

பேராசிரியர்

இவர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இறுதி நான்கியல்களுக்கும் உரை எழுதியுள்ளார். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.

சேனாவரையர்

இவர் வடமொழி, தமிழ்மொழி எனும் இருமொழிப் புலமையும் உடையவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் இவர் உரை எழுதியுள்ளார். ‘வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்' எனும், தொடர் இவர் பெருமையைப் பறைசாற்றும், இவர் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.

நச்சினார்க்கினிரியர்

‘உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியார்’ என இவரைப் பாராட்டுவர் தொல்காப்பியம் முழுமைக்கும்