பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

உமாபதி சிவாச்சாரியார் எழுதிய நெஞ்சுவிடு துதே தூதிலக்கியங்களுள் முதலாவதாகும். பல பட்டடைச் சொக்சுநாதப் புலவர் எழுதிய கிள்ளைவிடு தூது தூதிலக்கியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அடுத்ததாகக் குறிப்பிடத்தக்கது தமிழ் விடு தூதாகும்.

“இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

-தமிழ்விடுதூது

கலம்பகம்

பலவகை மலர்களால் தொடுக்கப்பட்ட கதம்பமாலை போலப் பலவகைப் பாக்களால் பாடப்படுதல் பற்றிக் கலம்பகம் என்ற பெயரைப் பெற்தென்பர் சிலர், சிலர் கதம்பம் என்பதன் மரூஉ மொழியே கலம்பகம் என்பர். கலம்+பகம்; கலம் 12, பகம்-அதில் பாதி 6 ஆக 18 உறுப்புகள் கலந்துவரப் பாடப்படுவது கலம்பகம் என்பர். வேறு சிலர். புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதாயம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்பன பதினெட்டு உறுப்புகளாகும்.

பிள்ளைப் பெருமளையங்காரின் திருவரங்கக் கலம்பகமும், சைவ எல்லப்ப நாவலரின் திருவருணைக் கலம்பகமும், குமரகுருபரரின் மதுரைக் கலம்பகமும் கலம்பக நூல்களுள் குறிப்பிடத்தக்கனவாகும். கலம்பகத்திற்கு இரட்டையர் எனும் தொடர் கலம்பகம் பாடுவதில் இரட்டையர் வல்லவர் என்பதைக் குறிப்பிடுகிறது. தில்லைக் கலம்பகம் இவர்கள் பாடியதாகும்.

பிள்ளைத் தமிழ்

தான் போற்றும் கடவுளரையோ, அரசரையோ, பெரியோரையே குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவம்