பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

அப்துல்காதர் புலவர் முதலியோர் இசுலாமியப் புலவர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

1. உமறுப் புலவர்

இவர் முகம்மது நபிகளின் வரலாற்றைச் “சீறாப் புராணம்” என்னும் காப்பியமாகத் தந்துள்ளார். இதில், 900 பாடல்கள் உள்ளன; இவர் இந்நூலைக் கம்பரைப் பின்பற்றிப் பாடியுள்ளார்.

2 பீர் முகமது

திருநெறிகீதம், ஞானக்குறம் ஞானப்பாட்டு முதலான பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் 1809 பாடல்களுக்குமேல் பாடியுள்ளார்.

3 குணங்குடி மஸ்தான்

ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். முகதீன் சதகம் முதலானவை இவர் பாடியனவாகும். இவர் பாடல்கள் மிகுதியாகத் தத்துவக் கருத்துகளைக் கொண்டவை.

4 வண்ணக் களஞ்சியப் புலவர்

இவர் 'இராச நாயகம்' எனும் பெருநூல் ஒன்றனையும், ‘அலிபாதுஷா நாடகம்' எனும் நாடகம் ஒன்றனையும் இயற்றியுள்ளார்.

5 செய்குதம்பிப் பாவலர்

இவர் சதாவதானம் செய்வதில் வல்லவர்; கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், திருநாகூர் திரிபந்தாதி, நீதி வெண்பா, காரணமாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

6 அப்துல்காதிர் புலவர்

சந்தத் திருப்புகழ், திருமதீனத்து மாலை, நவமணி தீபம், மெய்ஞ்ஞானக் கோவை, கண்டிக் கலம்பகம் முதலாக முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் இவர் இயற்றினவாகும்.

த—7