பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

தொகை, தொடை எனும் நான்கு பகுதிகளைக் கொண்டது. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவைக் கதையை உரைநடையில் எழுதிக் கதையிலக்கியத்திற்கும் உரைநடை வளர்ச்சிக்கும் வழிகாட்டினார். வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம் முதலிய உரைநடை நூல்களையும் இயற்றினார்.

'தேம்பாவணி' இவர் இயற்றிய குறிப்பிடத்தக்க காப்பியமாகும். இது தூயவளனாரின் வரலாற்றைக் கூறுகிறது. இலக்கிய வளம் மிக்கது; காவிய மணம் கமழ்வது; ஏறத்தாழ 3600 பாடல்களைக் கொண்டது. திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை அடைக்கலமாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, அடைக்கல நாயகி வெண்கலிப்பா ஆகிய நூல்களும் இவர் இயற்றியனவே. குறில் எகர ஒகரங்கள் முற்காலத்தில் புள்ளியிட்டு எழுதப்பட்டன. வீரமாமுனிவரே புள்ளியை விலக்கி எ ஏ. ஒ ஒ எனும் வடிவைத் தந்தார்.

ஜி. யு போப்

1830 இல் இங்கிலாந்தில் பிறந்த போப் எனும் பாதிரியார் தம் பத்தொன்பதாம் வயதில் தமிழகம் வந்தார். நீண்டநாள் தமிழ்த் தொண்டாற்றினார்; திருக்குறள், நாலடியார், சிவஞான போதம். திருவாசகம் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; தமிழ் இலக்கணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளியிட்டார். தம் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன், என்று பொறிக்க வேண்டும் என விரும்பினார். இஃது அவருக்குத் தமிழின் பாலிருந்த பற்றினை விளக்குகிறது. இவர் சமுதாயப் பணியும் ஆற்றினார்.

டாக்டர் கால்டுவெல்

1814 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்: சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்தார்; திருநெல்வேலி மாவட்