பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரமார்த்த குருவின் கதை

இந்தக் கதை நூலே வீரமாமுனிவர் தமிழிலும் இலத்தீனிலும் எழுதியுள்ளார். இந்நூல் முதல் முதலாகப் புதுவை மாதாகோயில் அச்சகத்தில் 1845-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது. அதே அச்சகத்தில் 1952-ஆம் ஆண்டிலும் இது பதிப்பிக் கப் பெற்றுள்ளது. நூலின் பெயர் முதலில் இலத் தீனிலும் பின்னர்த் த மி ழி லு ம் கொடுக்கப் பட்டுள்ளது, அதேபோல் நூலின் உள்ளே கதை களும் முதலில் இலத்தீனிலும் பின்னர்த் தமிழிலும் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. அதிலும், நூ லி ன் இடக்கைப் பக்கத்தில் இலத்தீன் பகுதியும் வலக்கைப் பக்கத்தில் தமிழ்ப் பகுதியுமாக மாறி மாறித் தரப் பட்டுள்ளன.

இனி, நூலின் பெயரைப் பற்றியும் பதிப்பைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் அமைக் துள்ள நூலின் முகப்புப் பக்கம் (Title Page) அதிலுள்ளாங்கு அப்படியே வருமாறு:

FA B U L A

De Etbnicorum Magistro

Paramartaguru Dicto, A. P. Josepho Constantio Beschi

Societatis Jesu Tamulica Lingua Scripta Et Ab Ipso Auctore In Latinam Versa