பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

‘தமிழகத்தில் அலுவல் பார்க்கும் வெள்ளேயர்கள் தமிழ் கற்பதற்குத் துணைபுரியும் பணியின் ஒரு பகுதியாக இந்நூலேப் படைக்கிறேன். இங்கே சுற்று வட்டாரத்தில் வழங்கும் ைக ச் சு ைவ ததும்பும் கதைகளைத் தமிழ் மொழி மரபு கெடாமல் இந்நூலில் எழுதியுள்ளேன். புதிதாகத் த மி ழ் கற்கும் வெள்ளேயர், வெற்றுக் கருத்துக்களைப் படிப்பதனினும், நகைச்சுவைக் கதைகளைப் படிப் பதில் ஆர்வமும் ஊக்கமும் மிகுதியாகக் கொள்வர். இதல்ை, கதைக்கும் கதையாகிறது; தமிழ் மொழிஇலக்கணம் கற்பதற்கும் வழியாகிறது; அதாவது, ஒரே நேரத்தில் சுவைக்கவும் கற்கவும் முடியும். மற்றும், தமிழ் கற்கும் வெள்ளேயர்க்குத் துணையா யிருப்பதற்காகக் கதைகள் இலத்தீனிலும் தரப் பட்டுள்ளன. தமிழ்ப் பகுதியில் ஏற்படும் ஐயங்களே இலத்தின் பகுதியைக் கொண்டு தெளிவுசெய்து கொள்ளலா மல்லவா? எனவேதான் இருமொழி

களிலும் எழுதி இந்நூலே அமைத்தேன்.’

மேலே தரப்பட்டுள்ள செய்தி, வீரமாமுனிவர் இலத்தீனில் எழுதியுள்ள முன்னுரையின் நேர் மொழிபெயர்ப்பன்று; அதைத் தழுவி ஓ ர ள வு சுருங்கத் தரப்பட்டதேயாம். இனி அந்த இலத்தீன் முன்னுரை நூலிலுள்ளாங்கு வருமாறு: