பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


இந்நூலில் மொத்தம் எ ட் டு க் க ைத க ள் உள்ளன. அவை: (1) ஆற்றைக் கடந்த கதை, (2) குதிரை முட்டை வாங்கின கதை, (3) வாடகை மாடேறிப் பிரயாணம் போன கதை, (4) குதிரை பிடிக்கத் துரண்டில் விட்ட கதை, (5) குதிரை மேனின் றுாருக்குப் போன கதை, (6) பிராமணன் சொன்ன புரோகிதக் கதை, (7) குதிரையிலிருந்து விழுந்த கதை, (8) குருவைச் சேமித்த கதை, என்பனவாகும். இவை முறையே இ ல த் தீ ன் Quom u%ύ, (1) Transitus Fluvii, (2) Emptio Ovi Equini, (3) Actum Conducto Bove Iter, (4) Piscatura Equi, (5) Iter In Equo, (6) Prophetia Brachmanis, (7) Lapsus Magistri ex Equo, (8) Magistri Sepultura, 6T6TL Quuii குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நூற் கதைகள் எட்டும், பரமார்த்த குரு என்னும் ஆசிரியர் - அறிவாற்றல் இல்லாத மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்னும் மூட மானக்கர் ஐவர்-ஆகியோரைப் பற்றியன வாகும். படிக்கப் படிக்கப் பெருங்கைப்பு உண் டாக்கும் சுவை மிக்க இனிய கதைகள் இவை. மாதிரிக்காக, காலாவதாகிய குதிரை பிடிக்கத் துாண்டில் விட்ட கதை’ என்னும் கதையை இவண் காண்பாம். நூலிலுள்ளவாறே, இடக்கைப் பக்கம் இலத்தீன் பகுதியும், வலக்கைப் பக்கம் தமிழ்ப் பகுதியும் நேருக்கு நேர் வருமாறு: