பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


மேலே கொடுக்கப்பட்டுள்ள கதையுரைகடைப் பகுதியில், ஆசிரியர் வீரமாமுனிவர், த மி ழ் ப் புணர்ச்சியிலக்கண விதிகளை யொட்டிச் சொற்களைப் புணர்த்தே எழுதியிருப்பதைக் காணலாம். மற்றும், நேர்த்திக் கடன், கிழலாக்கும், அடைசி கின்றான், சன்னை, சைக்கினை முதலிய தென் மாவட்ட வழக்குச் சொற்கள் முனிவரின் மொழி நடையில் காணப் படுவதும் குறிப்பிடத்தக்கது. ‘கம்மது’, ‘கடிக்குது’, எல்லாத்தையும் என்பன போலக் .ெ கா ச் ைச யுருவங்கள் சிலவும் நூலில் ஆங்காங்கே தென்படு கின்றன.

வெள்ளேயரிடையே த மி ழ் பரப்புவதற்காக, ஆசிரியர் இலத்தீனிலும் தமிழிலுமாக இக்கதை நூலே எழுதியிருக்கும் அரும் பெரும் பணி யை யார்தான் பாராட்டாமல் இருக்க முடியும்?