பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


போதிலும், அண்மையிலுள்ள கடலூரில் இல்லாத இந்தச் சொல் புதுச்சேரியில் மட்டும் வழங்கப்படு வது ஈண்டு குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தச் சொல்லாட்சியைக் கொண்டும், இந்த அ. க ரா தி புதுச்சேரியில் வாழ்ந்த ஒருவரால் புதுப்பிக்கப் பட்டுள்ளது என்று துணியலாம்.

அடுத்து, அகராதியில் இடம் பெற்றுள்ள வாசகப்பா’, ‘வாசாப்பு’ என்னும் சொற்கள் மிகவும் குறிப்பிடத்தக்கன. அகராதியில் வாசகப்பா - vidவாசாப்பு’ என, வாசகப்பா என்றாலும் வாசாப்பு என்றாலும் ஒன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது; வாசாப்பு என்பதற்கு, வாசாப்பு - tragedia, comedia எனப் பொரு ள் கூறப்பட்டுள்ளது. வாசகப்பா அல்லது வாசாப்பு என்பதற்கு நாடகம். என்பதாகப் பொருள் கூறப்பட்டுள்ளது. இங் த வாசகப்பா என்னும் சொல்லாட்சி புதுவைப் புலவர் களால் கையாளப்பட்டுள்ளது. பு து ைவ மகா வித்துவான்’ பு. அ. பெரியசாமிப் பிள்ளேயவர்கள் புரூர்வச்சக்கரவர்த்தி வாசகப்பா’, ‘அப்பூதியடிகள் வாசகப்பா முதலிய இசை நாடகங்கள் எழுதியுள் ளார். இவை புதுவையில் நடிக்கப்பட்டுள்ளன. வாசகம் போன்ற எளிய செய்யுள்நடையில் எழுதின இசை நாடகம் வாசகப்பா என இங்கே அழைக்கப் பட்டது. புதுவையில் வாழ்ந்த வல்லே தே விரிவில்’ (Vallet de viriville) என்னும் பிரெஞ்சுக்காரர்கூட, “எஸ்தாக்கியர் வாசகப்பா (Saint Eustache) என்னும் வா சக ப் பா நூல் ஒன்று 1837-ஆம் ஆண்டு இயற்றினர். அது 1845-ஆம் ஆண்டு புதுவையில்