பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


நடிக்கப்பட்டு அரங்கேற்றம் பெற்றதாம். எனவே, இந்த வாசகப்டா என்னும் சொல் அகராதியில் இடம் பெற்றிருப்பதைக் கொண்டும், இந்த அகராதி, புதுச்சேரியில் வாழ்ந்த ஒருவரின் கைவண்ணம் பெற்றுள்ளமை புலனுகும்.

இந்த அகராதியின் முற்குறிப்பில் கூறப்பட் டுள்ளபடி, அங்கணே போன்ற மதுரை மாவட்டச் சொற்கள் இடம் பெற்றிருப்பதால் மதுரை வட் டத்தில் வாழ்ந்த வீரமாமுனிவர் இந்த அகராதியை முதலில் தொகுத்தார் என்பதும், பு து ச் சேரி வட்டாரத்துச் சொற்களும் இடம் பெற்றிருப்பதால், பு து ச் சேரி த் துறவி யொருவர் மேலும் சில சொற்களைச் சேர்த்து இந்த அகராதிப் படியை எழுதினர் என்பதும், இதுகாறுங் கூறியவற்றால் பெற்ற முற்ற முடிந்த முடிபாகும்.

இந்த அ. க ரா தி யி ல், வடமொழியிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன; அவை உடுக்குறியிட்டுக் காட்டப் பட்டுள்ளன. ‘ஈ’ என்னும் உயிர் நெட்டெழுத்து இந்த வடிவில் எழுதப்படாமல் இ’ எ ன் னு ம் குறிலின் முடிவில் சுழி பெற்று “இ” என எழுதப் பட்டுள்ளது. ‘ர’ என்னும் எழுத்து ர என எழுதப் பட்டுள்ளது. இப்படிப் போன்ற சில எழுத்து வடி வங்களேக் கொண்டே இந்த நூல் ஒரு கையெழுத் துப் படி என உணரமுடிகிறதே தவிர, மற்றபடி நூல் முழுதும் அச்செழுத்துப்போல் அ மு கா க எழுதப்பட்டுள்ளது. வீரமாமுனிவர் போன்றாேளின் இத்தகைய கையெழுத்துப் படிகள் மிக வு ம் போற்றிக் காக்கப்படவேண்டியவையாகும். வீரமா முனிவர் 1744-ஆம் ஆண்டு எழுதிய ‘Dictionnaire Tamoul et Francais’ argr @juh suyb - L3@p Gjr அகராதியின் பெரிய கையெழுத்துப் படி யொன்றும்