பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


மேலே காட்டப்பட்டுள்ள நூல் முகப்புப் பக்கத் தில், முதலில் இலத்தீன் மொழியிலும், இரண்டாவ தாகப் பிரெஞ்சு மொழியிலும், மூன்றாவதாகத் தமிழ் மொழியிலும் நூலுக்குப் பெயர் கொடுக்கப்பட் டிருப்பதைக் காணலாம். அடுத்து, புதுச்சேரி கிறித்துவத் திருப்பேரவையைச் சேர்ந்த துறவியர் இருவர் இந்த அ. க ரா தி ைய ஆக்கிய விவரம் ('Auctoribus Duobus Missionariis Apostolicis') தரப்பட்டுள்ளது. துறவியர் இருவர்’ எனப் பொதுப் படையாக உள்ளதே தவிர, அவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. அரிதின் முயன்று இவ்வளவு பெரிய அகராதியைப் படைத்த அந்தத் துறவியர் இருவரின் பெயர்களையும் வெளிப்படையாகத் தெரி வித்திருக்கலாமே? அவ்வாறு தெரிவிக்காததற்குரிய பொருட்டு என்னவோ ? சேசு திருப்பேரவையைச் சேர்ந்த துறவியர் இருவரும்,"இந்தப் பெருமை திருப் பேரவைக்கே உரித்தாகவேண்டும்;தமக்கு வேண்டிய தில்லை’ - என்ற தன்னடக்கத்தில்ை நூலில் தம் பெயர்களைப் பொறிக்க மறுத்துவிட்டிருப்பார்களோ என்னவோ? எப்படி யிருப்பினும் அவர்தம் பெயர் களே நாம் கண்டுபிடித்துக் கொணரவேண்டும்.

இந்த இலத்தீன்-பிராஞ்சு-தமிழ் அகராதியின் ஆசிரியர்களாகிய துறவியர் இருவர் எனப்படுபவர், “apGer” (L. Mousset), “guilui” (L. Dupuis) என்னும் அ றி ஞ ர் இருவராகத்தான் இருக்க வேண்டும். இதற்குரிய சான்றுகளாவன:

1855-ஆம் ஆண்டு புதுச்சேரி மாதாகோயில் அச்சகத்தில் அச்சிடப்பெற்ற த மி ம் - பிரெஞ்சு