பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


இருவர் தமிழ் - இலத்தீன் அகராதி

இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதியை ஆக்கிய முசே, துய்புய் என்னும் துறவியர் இரு வரும், தமிழ் - பிரெஞ்சு அகராதியும் பிரெஞ்சு - தமிழ் அகராதியுங்கூட ஆக்கியிருப்பதால், இவர் களே தமிழ் - இலத்தீன் அகராதி யொ ன் று ம் ஆக்கியிருக்கக்கூடும். அது பதிப்பிக்கப்பெறவில்லே போலும். பிரெஞ்சு . தமிழ், தமிழ் - பிரெஞ்சு என மாற்றிப்போட்டு அகராதிகள் படைத்திருப்பது போலவே, இலத்தீன் - தமிழ், தமிழ் - இலத்தீன் என மாற்றிப்போட்டு இரு வ ைக அகராதிகளும் படைப்பது எளிய செயலேயாகும், அ. தாவ து, இலத்தீன்-தமிழ் அகராதி படைத்துவிட்ட பிறகு, அதையே மாற்றிப் போட்டுத் தமிழ் - இலத்தீன் அகராதி படைப்பதில் அருமைப்பாடு ஒன்றும் இருக்க முடியாது. எனவே, இவர்கள் இருவரும் தமிழ் - இலத்தின் அகராதி தொகுத்துத்தான் இருப்பர். அது சரியான முறையில் உருவா கி அச்சேருததால் நமக்குக் கிடைத்திலது போலும்!